சென்னை : தமிழகத்தில், மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6 ஆனது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது :
வீட்டுக்கண்காணிப்பில் இருப்பவர்கள்: 91,851 பேர்
அரசின் தனிமை முகாம்களில் இருப்பவர்கள்: 205 பேர்
1,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவியுள்ளது. இன்று மட்டும் 50 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 48 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 621, பலி: 6 ஆக உயர்வு